கமல், நயன்தாரா, மோகன்லாலைத் தொடர்ந்து பிரபாஸ்!

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், முதல் முறையாக, மகிந்திரா நிறுவனத்தின், கார் விளம்பரத்தில் நடித்துள்ளார். திரை உலகின் பிரபலங்கள் அவ்வப்போது , ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விளம்பர தூதரக இருப்பதும், அதற்கான விளம்பரங்களில் நடிப்பதும் சகஜமான ஒன்று தான், ஆனால் சில நடிகர்கள் இதில் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதும் உண்டு. சிலர் தனக்கேற்ற விளம்பரம் வரும் வரை காத்திருப்பதும் வழக்கம். இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸுக்கு விளம்பர வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

பிரபாஸ் நடித்து வெளியாகி இருக்கும் விளம்பரம், அவரது ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது. மகிந்திரா TUV 300 கார் விளம்பரத்தில், பிரபாஸ் வரும் காட்சி வெறும் 5 வினாடிகள் தான் என்றாலும், இது அவரது முதல் விளம்பரப் படம் என்பதால், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'ஒன்ஸ் மோர்' என பிரபாஸ் இதில் கூறும் ஒரே வார்த்தை, காருக்காக என்றாலும், நமக்கும் ஒன்ஸ் மோர் கேட்க் தோன்றுகிறது.

விளம்பரத்தைக் காண:  

 

-பிரியாவாசு- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!