சங்கராபரணம், சலங்கை ஒலி படங்களின் தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ் மரணம்!

சங்கராபரணம் , சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ் நேற்று மாலை மரணமடைந்தார். 81 வயது நிறைந்த ஏடித நாகேஸ்வர ராவ் மேடை நடிகராக இருந்து, பின் சினிமாவில் நடிகரானவர்.

டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ள இவர், பின்பு, பூர்னோதையா மூவி கிரியேசன்ஸ் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தயாரித்த சங்கராபரணம் , ஸ்வயம் கிருஷி, ஸ்ரீ ஸ்ரீ மூவா, ஸ்வதி முத்யம் போன்ற படங்கள் மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. தெலுங்கான முதலமைச்சர் K. சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திரா பிரேதச முதலமைச்சர் N. சந்திரபாபு நாயுடு போன்றோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் பல சினிமா பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!