வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (05/10/2015)

கடைசி தொடர்பு:18:27 (05/10/2015)

மணிரத்னம் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியதன் உண்மைக் காரணம்?

ஓகே கண்மணி படத்தையடுத்து துல்கர் சல்மான் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிவிப்பில் பிரதாப்போத்தன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

முதலில் அவர்  மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. இதனால்,  துல்கர் சல்மான் சரியான  தேர்வு அல்ல எனும் தகவல் சுற்றலில் இருந்தது. எனினும் ஓகே கண்மணி படம் ஓகே பங்காரம் என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது  என்பதால், அதெப்படி துல்கர் தெலுங்கிற்கு சரியாக இருக்க மாட்டார் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டதாம்.

இந்நிலையில்தான்,  பிரதாப் போத்தன்  இயக்க உள்ள புதுப்படம் ஒன்றில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படம் பெங்களூரு டேய்ஸ், உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை உருவாக்கிய அஞ்சலி மேனன் கதை எழுத இப்படம் உருவாக உள்ளதாகவும். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனவும் துல்கர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்தப்படம் அடுத்த வருடம் துவங்க உள்ளது. இதற்கிடையில் என் கையில் இருக்கும் படங்களை முடிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.தற்சமயம் சார்லி, மற்றும் கலிப்பு என்னும் இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பிரதாப் போத்தனை அணைத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை துல்கர் சல்மான் வெளியிட அதை  பிரதாப் போத்தனும் பகிர்ந்துள்ளார்,

80களின் துவக்கத்தில் துல்கரின் அப்பாவான மம்மூட்டியைப் பார்த்தேன். அமெரிக்கா அமெரிக்கா ஷூட்டிங்கில்  இருந்தோம் என்பது உட்பட  மம்மூட்டியுடனான சில சுவாரஸ்ய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார் பிரதாப்.

இதனால், மணிரத்னம் படத்தில் துல்கர் நடிக்கமாட்டார் என்கிற செய்தி உண்மையாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மணிரத்னம் படத்தில்  கார்த்தி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பது உறுதி என்று அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.  

இவ்விரண்டையும் வைத்துப் பார்க்கிறபோது, பிரதாப்போத்தன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாலேயே மணிரத்னம் படத்தில் துல்கரால் நடிக்கமுடியவில்லை என்றும் சொல்கிறார்கள்.மேலும் துல்கரின் கேரக்டருக்கு வேறு ஒரு நடிகர் தேர்வும் நடந்து வருகிறதாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்