பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஹார்ட்-அட்டாக்!

பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். கன்னட திரையுலகில் நம்பர்-1 நடிகராக இருக்கிறார்.

50 வயதைக் கடந்த சிவராஜ்குமாருக்கு இன்று காலை, திடீரென நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் மூலம் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், லேசான ஹார்ட்-அட்டாக்கில் சிவராஜ்குமார் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனவே அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், மருந்துகள் மூலம் இதைச் சரி செய்ய முடியும் என்றும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கும் இதய பிரச்சினை இருந்தது. எனவே அவரது மகனுக்கும், மரபுவழியில் அந்த பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று மல்யா மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இன்னும் இரு நாட்களுக்கு சிவராஜ்குமார் மருத்துவமனையில் ஓய்வெடுக்க உள்ளார்.

சிவராஜ்குமார், ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், ரசிகர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சிவராஜ்குமார், நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பிரபு உள்ளிட்டோருடன் மிக நெருக்கமாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!