படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த ஷாருக்கான்!

தெலுங்கில் ராம் சரண் தற்போது நடித்து வரும் படம் 'புருஸ் லீ' தி ஃபைட்டர். இது ராம் சரணுக்கு 9வது படம். ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இப்படம் தமிழிலும் டப்பாகி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

அங்கு திடீரென பாலிவுட் டாப் நாயகன் ஷாருக் கான், வருகை புரிந்து இன்ப அதிர்ச்சியில் கொடுத்துள்ளார். 'தில்வாலே' படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாதில் உள்ள ஷாருக்கான், அருகிலேயே படப்பிடிப்பு நடத்தி வந்த புரூஸ்லீ படப்பிடிப்புத் தளத்துக்கும்  சென்று ராம் சரணின் நடனத்தையும் பார்த்து ரசித்துள்ளார்.

முன்னதாக மகேஷ் பாபுவின் 'பிரம்மோத்சவம்' படப்பிடிப்புத் தளத்திற்கு ஷாருக்கான் சென்றது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தெலுங்கு சினிமா படப்பிடிப்புத் தளங்களுக்கு ஷாருக்கான் விசிட் அடிப்பது பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. ஏனேனில் தன் படங்களில் அதிகமாக தமிழ் சினிமா நடிகர்களையும், தமிழ் சார்ந்த கலாச்சாரங்களையும் அவ்வப்போது ஷாருக்கான் பயன்படுத்துவது வழக்கம். 

இதனாலேயே அவருக்கு தமிழில் மற்ற இந்தி நடிகர்களைக் காட்டிலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் தற்போது தெலுங்கு ரசிகர்களையும் ஷாருக்கான அதிகமாக குறிவைக்கிறாரோ என்றே தோன்றுகிறது. 

- பிரியாவாசு- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!