விஜய்யைத் தொடர்ந்து மகேஷ்பாபு...ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி? | Mahesh Babu and A.R.Murugadoss are going to team up soon

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (08/10/2015)

கடைசி தொடர்பு:12:34 (08/10/2015)

விஜய்யைத் தொடர்ந்து மகேஷ்பாபு...ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி?

தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என ஹிட் படங்களைத் தந்த A.R.முருகதாஸ், விரைவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் இயக்கவுள்ளார். நீண்ட நாட்களாக இழுவையில் இருந்த இந்த விஷயம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் - தெலுங்கு  என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இப்படம், மகேஷ் பாபு தற்போது நடித்துவரும் 'பிரம்மோத்சவம் ' பட வேலைகள் முடிவடைந்தவுடன், தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை  ஆ.பி.சௌத்ரி மற்றும் எ.வி.பிரசாத் இருவரும் இணைந்துத் தயாரிக்கவிருக்கிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்திற்கு இசை  ஹாரிஸ் ஜெயராஜ்.  இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கான் நடிப்பில் தனி ஒருவன் ரீமேக்கை இந்தியில் எடுக்க இருக்கிறார் என செய்திகள் பரவி வருகிறது. ஆனால் தற்சமயம் சோனாக்ஸி சின்ஹா நடிப்பில் மௌனகுரு இந்தி ரீமேக்கான அகிரா, பின்னர் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் என்பதே ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தடுத்தத் திட்டம் என்கிறது கோலிவுட் நம்பிக்கை வட்டாரங்கள்.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close