தனிஒருவன் அரவிந்த்சாமி பாத்திரத்தில் இவரா?

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்க இருப்பது நாமறிந்ததே. அப்படத்தில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி, கவனத்தையும் ஈர்த்த வில்லன் அரவிந்த் சாமி தான்.மேலும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமும் அவர்தான் எனலாம். இந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிக்கப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நாகர்ஜுனா , ராணா டகுபதி என மேலும் பலரின் பெயர்கள் அடிபட்டன.

தற்போது அதில் மாதவன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது பற்றி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மாதவன் அப்பாத்திரத்திற்கு கச்சிதமாகவே இருப்பார் என சினிமாத் தரப்பில் பேசப்படுகிறது.

 

தெலுங்கில் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார், ராம்சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்பு தமிழில் தனி ஒருவன், சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் மாதவனிடமே கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மாதவன், பாலிவுட்டில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துவந்த நிலையில் அவரால் நடிக்க முடியாது போனது. எனினும் அந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் வருத்தம் தெரிவித்தார் மாதவன். தற்போது அந்த வாய்ப்பு தெலுங்கில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!