அனிருத்துக்கு இவ்வளவு சம்பளமா? அதிரும் தெலுங்கு திரையுலகம்

தனுஷ் நடிப்பில் 3  படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ஓய் திஸ் கொலவெறிடி பாடலின் மூலம் உலகளவில் முதல் படத்திலேயே ஹிட் அடித்தார்.

இன்று வரை இந்தியாவிலேயே 100 மில்லியன் முறை பார்வையிடப்பட்ட பாடலாக இப்பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிலிருந்து அடுத்தகட்டமாக தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் அனிருத். தெலுங்கில் தேவிஸ்ரீபிரசாத், தமன் இருவரின் பாடல்களே ஹிட் அடிக்கும் நிலையில் அவர்களுக்குப் போட்டியாக அனிருத் களம் இறங்குகிறார்

தேவிஸ்ரீ பிரசாத்துடன் கை கோர்க்கும் இயக்குநர் த்ரிவிக்ரம் இந்த முறை  அனிருத்தை அவர் படத்திற்கு ஓகே செய்திருக்கிறார். சமந்தா, நிதின் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 1.5 கோடி சம்பளம் அனிருத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் இதுவரை இசையமைத்த தமன் 60 முதல் 80 லட்சம் வரையிலும், தேவி ஸ்ரீபிரசாத் 1கோடி வரையிலுமே சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

போட்டியின்றி இருந்த தெலுங்குப் பட உலகில் அனிருத் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என்று தெலுங்கு வட்டாரம் கிசுகிசுக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!