த்ரிஷாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஊர்மக்கள்!

நாயகி படத்தின் படப்பிடிப்புகள் தெலுங்கானாவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் உள்ள ஸஹீராபாத் நகர் பகுதியை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நடந்து வருகின்றன. பேய்ப் படமாக உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி ராஜமௌலி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் த்ரிஷா நடிப்பதை மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்களாம். வாசலின் கதவருகிலேயே நின்றுக்கொண்டு எந்தக் கூச்சலோ இடையூரோ கொடுக்காமல் அமைதியாக படப்பிடிப்பை பார்ப்பதும், மேலும் த்ரிஷா வரும் போது கொஞ்சம் ஆர்வம் காடுவது மட்டுமின்றி எந்தப் பிரச்னையும் செய்யாமல் படப்பிடிப்புக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்களாம்.

 

படத்தின் இயக்குநர் கோவி இதுகுறித்து கூறுகையில், 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்தப் பகுதியில் படப்பிடிப்புகள் எடுப்பது இதுதான் முதல் முறை. எனினும் மக்கள் ஆர்வமாக படப்பிடிப்பை பார்க்கிறார்களேத் தவிர எங்களை தொந்தரவு செய்யவே இல்லை. த்ரிஷாவுக்கு இது மிகவும் பிடித்துவிட்டது. தன்னை ஒரு இளவரசி போல் அவர்கள் மதிப்பதும், படப்பிடிப்பை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும் என த்ரிஷாவை கொஞ்சம் அதிகமாகவே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர் அந்தப் பகுதி மக்கள் என இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!