இளம் நடிகரின் உயர்ந்த உள்ளம்...ஆச்சர்யத்தில் திரையுலகம்!

தெலுங்கு நடிகர் நாக ஷௌர்யா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஜாடுகாடு படத்தின் மூலம் பிரபலமான நாக ஷௌர்யா தற்சமயம் கல்யாண வைபோகமே படத்தில் பிசியாக நடித்துவருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இப்படம் மட்டுமின்றி ரமேஷ் வர்மா இயக்கத்தில் அப்பயதோஅம்மாயி படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நாக ஷௌர்யா விளம்பரங்களின்றி ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உதவியுள்ளார். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பி.சத்யாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து 50,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேச மறுத்து நான் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை என சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் நாக ஷௌர்யாவின் தந்தை சங்கர பிரசாத் நடத்தும் ட்ரஸ்டை இவர் எடுத்து நடத்துவதாகவும் அதன் மூலம் பல உதவிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!