ஆந்திர முதல்வர் கொடுத்த வாய்ப்பை நிராகரித்த ராஜமௌலி!

 மாவீரன், ஈ, பாகுபலி படங்களின் மூலம் இந்தியப்புகழடைந்த ராஜமௌலி தற்போது அனைவரின் எதிர்பார்ப்பான பாகுபலி 2 படத்தின் உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவில் புதியதலைநகர் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. மேலும் இந்தத் தலைநகர் அமைப்பில் சில சினிமா இயக்குநர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அரங்கங்களும், விழாவும் உருவாக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கு பொயாபதி மற்றும் ராஜமௌலி இருவரிடமும் கேட்டார்களாம். செட்டிங் அமைக்கும் பணிக்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு அளித்த தொகையில் விருப்பமில்லை எனக் கூறி பொயாபதி விலகியுள்ளார்.

அடுத்தகட்டமாக இந்த வாய்ப்பு, ராஜமௌலிக்குப் போயிருக்கிறது.  அவர் எதுவுமே கேட்காமல் மறுத்துவிட்டாராம். பாகுபலி 2  படத்தை முடிக்கும் வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது என திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டாராம்.

வரவேற்பு நிகழ்ச்சியை மிக விமரிசையாக சினிமா பாணியில் நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. காரணம் இந்த விழாவிற்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்க உள்ளனர் என்பதுதான் இவ்வளவு ஏற்பாடுகளுக்கும் காரணமாம்.

எனினும் தற்போது இரு பெரும் இயக்குநர்களும் நிராகரிக்க வேறு ஒரு இயக்குநருக்காக காத்திருக்கிறார்கள் ஆந்திர அரசியல் பிரமுகர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!