ராம் சரண், அனுஷ்கா விவகாரம்...முற்றுப்புள்ளி வைத்த அல்லு அர்ஜுன்!

பாகுபலி அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ருத்ரமாதேவி. கடந்த வாரம் தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறாததால், அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான குணசேகருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 16 அன்று மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவான புரூஸ் லீ படம் வெளிவர உள்ளது.

புரூஸ் லீ-யின் ரிலீஸ், ஏற்கனவே மந்தமாக உள்ள ருத்ரமாதேவியின் வசூலை மேலும் பாதிக்கும் என எண்ணிய குணசேகர் மற்றும் தாசரி போன்றோர் புரூஸ் லீயின் ரிலீஸ் தேதியினை தள்ளி வைக்கக் கேட்டுள்ளனர். ஆனால் புரூஸ் லீ படக் குழுவினர் முன்னதாகவே படத் தேதியை வெளியிட்டு அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், தற்போது திடீரென தேதியை தள்ளிவைத்தால் நிறைய பிரச்சனைகள் வரும் என்று கூறிவிட்டனர்.

 இது பற்றி அல்லு அர்ஜுன் எந்த வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தது, ரசிகர்களை சிரமத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"புரூஸ் லீ படத்தின் தயாரிப்பாளரை குறை கூறுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை, அவர்கள் முன்னதாகவே படத்தின் ரிலீஸ் தேதியினை தெரிவித்துவிட்டனர். ருத்ரமாதேவி செப்டம்பர் 4ம் தேதியே ரிலீஸ் ஆக வேண்டியது, சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

புரூஸ் லீ ரிலீஸ் தேதி அறிந்து தான் ருத்ரமாதேவி தயாரிப்பாளர் அதனை வெளியிட்டுள்ளார், தற்போது இரண்டு படமும் ஒன்றாக ஓடி தான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்காக புருஸ் லீ பட குழுவினரைக் குறை கூற முடியாது என கூறியுள்ளார்.  தமிழில் டப்பாகி இவ்விரு படங்களும் வரும் வெள்ளியன்று வெளியாவதுக் குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!