புலி படப் பாணியில் சிக்கிய புரூஸ் லீ! அதிர்ச்சியில் சினிமா உலகம்

ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண், ரகுல் பரீத் சிங் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம் 'புரூஸ் லீ'. தெலுங்கில் இன்று வெளியாகும் இப்படம் தமிழிலும் டப்பாகி ரிலீஸ் ஆகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று திடீரென்று இப்படத்தின் தயாரிப்பாளர் தானய்யாவின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தில் ராஜு ஆகியோரது வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது.

இச்சம்பவம் புரூஸ் லீ படத்தின் ரிலீஸையும், அதன் வெற்றியையும் பாதிக்குமோ என ரசிகர்கள் பயந்த நிலையில், எந்தவித குழப்பமும் இன்றி இன்று இப்படம் வெளியாகி, ரசிகர்களிடமிருந்து நல்ல விமர்சனத்தையும் பெற்றுவருகிறது.எனினும் இதே பாணியில் தமிழில் விஜய்யின் புலி படம் வெளியான போது விஜய் உள்ளிட்டப் படங்களுக்கு சம்மந்தப்பட்ட பலரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதனால் படத்தின் ரிலீஸிலும் சில சிக்கல்கள் உருவாகி ஓரிரு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதும் நடந்தது. இது சரியாக படம் வெளியாகும் நாள் பார்த்து வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவது தொடர ஆரம்பித்துள்ளது என்றே கூற வேண்டும். மேலும் இது அடுத்தடுத்து வெளியாகும் பெரியப் படங்களை  குறிவைக்கும் நோக்கமா என சினிமா வட்டாரங்களில் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!