தனிஒருவன் ரீமேக், மாதவன் தொடங்கியிருக்கும் சர்ச்சை | I have not signed nor approved any other project in any language - Madhavan Announced

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (23/10/2015)

கடைசி தொடர்பு:13:09 (23/10/2015)

தனிஒருவன் ரீமேக், மாதவன் தொடங்கியிருக்கும் சர்ச்சை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் தனிஒருவன்.ஜெயம்ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம். ஆதி இசையில் பாடல்களும் ஹிட். டிவி, எஃப்.எம்களிலும் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தப் படத்தை பல மொழிகளுக்கு ரிமேக் செய்யத் தூண்டியுள்ளது. தெலுங்கில் ராம் சரண் ஜெயம் ரவி கேரக்டரில் நடிக்க, இயக்கவுள்ளார் சுரேந்தர் ரெட்டி. படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்க உள்ளார். தெலுங்கிற்காக ரிமேக் உரிமையை 5.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் தனய்யா.

படத்தின் மிகப்பெரிய பலம் அரவிந்த்சாமியின் கேரக்டர் தான். இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் மாதவன் நடிக்கிறார் எனத் தகவல்கள் கசிந்தன.

 இதற்கு மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். நண்பர்களே இது எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம். நான் நடித்து வரும் புராஜெக்ட்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளேன். மற்றவையெல்லாம் வதந்திகள். நான் எந்த மொழியிலும் எந்தப் படத்திற்காகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. தற்சமயம் நான் சாலா கடூஸ், மற்றும் இறுதிச்சுற்று இரு படங்களில் மட்டுமே நடித்துவருகிறேன் எனக் கூறியுள்ளார்.

தனிஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த்சாமி வேடத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்து பலநாட்கள் ஆகிவிட்டன, இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது அவர் மறுத்திருப்பது எதனால் என்ற கேள்வி எல்லோருக்கும் வந்திருக்கிறது. இதன்பின்னால் சில விசயங்கள் இருக்கின்றன, அவை விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close