பாகுபலி 2 படத்திற்குப் பிறகுதான் கல்யாணம் - பிரபாஸ் அதிரடி! | Prabhas to get married After Baahubali 2

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (26/10/2015)

கடைசி தொடர்பு:14:59 (26/10/2015)

பாகுபலி 2 படத்திற்குப் பிறகுதான் கல்யாணம் - பிரபாஸ் அதிரடி!

தென்னிந்திய சினிமா உலகைப் பொருத்தமட்டில், பேச்சிலராக இருக்கும் டாப் நடிகர்கள்  ஒரு சிலரே. விஜய், அஜித், மகேஷ் பாபு, துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, ராம் சரண் , என இப்படி பல ஹாட் ஹீரோக்கள் இருப்பினும் இவர்கள் எல்லாரும் திருமணம் ஆனவர்களே.

இந்நிலையில் பிரபாஸ், சிம்பு, ராணா, பாபி சிம்ஹா,விஷால், ஆர்யா, அகில், நாக சைதன்யா உள்ளிட்டோர் மட்டுமே இந்த பேச்சிலர் ஹாட் ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு பொருத்தமானவர்கள் எனலாம். இந்த லிஸ்டில் பிரபாஸ் தற்போது திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை பாகுபலி2 படப்பிடிப்புத் தளத்திலேயே வெகுவிமரிசையாகக் கொண்டாடிய பிரபாஸை நினைத்து வீட்டில் உள்ள அனைவரும் வருந்தவே. ஒரு வழியாக பெண் தேடும் படலத்திற்கு சரி சொல்லிவிட்டாராம், எனினும் பாகுபலி2 படத்தின் முடிவுக்குப் பிறகே திருமணம் எனக் கூறியுள்ளாராம்.  அப்படியானால் அடுத்த வருடம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பீமவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பிரபாஸ் வீட்டினர் முடிவு செய்துள்ளதாகவும், அவர் பி.டெக் முடித்துள்ளார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்