பாகுபலி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... பிரபாஸ் அப்டேட் வெர்ஷன்? | Is Baahubali Hero Prabhas to act in Dhoom 4

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (27/10/2015)

கடைசி தொடர்பு:14:50 (27/10/2015)

பாகுபலி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... பிரபாஸ் அப்டேட் வெர்ஷன்?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஹீரோ பிரபாஸுக்கு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்புகள் கிடைக்கத் துவங்கிவிட்டன.

தமிழில் வரும் பிரபல கார் விளம்பரத்தில் கூட பிரபாஸ் தலை காட்டுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணாவும் ஒரு இண்டர்நெட் குறித்த விளம்பரத்தில் வருகிறார்.

இந்நிலையில் மிகப்பெரிய வாய்ப்பாக பாலிவுட் வசூல் புகழ் பட சீரீஸ் தூம் படத்தின் 4ம் பாகத்தில் நடிக்க பிராபாஸிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 தூம் 4ல் ஹ்ருதிக் ரோஷன் , அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்  என்ற செய்தியே தூம் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி. அதே சமயம் ஹ்ருத்திக் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே வருவதாகவும், அமிதாப் ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் அபிஷேக் பச்சன் கண்டிப்பாக போலீஸாக வருவார். என்ற நிலையில் பிரபாஸை வில்லனாக நடிக்கக் கேட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இன்னும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படத்தின் ஹீரோதான் கதைப்படி வில்லன் என்பதால் பிரபாஸ் தான் ஆன்டிஹீரோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தூம் 4ல் ஒரு வேளை அமிதாப் தான் ஆன்டி ஹீரோ எனில் படம் கண்டிப்பாக சான் கானரி நடித்து வெளியான எண்ட்ரேப்மெண்ட் பாணியில் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close