வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (28/10/2015)

கடைசி தொடர்பு:15:09 (28/10/2015)

ஸ்ரீதேவி மகள் விசயத்தில் தெலுங்குத் திரையுலகம் முந்திக்கொண்டது?

தெலுங்கின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நன்னகு பிரேமதோ படத்தின் படப்பிடிப்பு யாவும் முடிந்து சமீபத்தில்  டீஸர் வெளியானது. இந்நிலையில் கொரட்டலா சிவா இயக்கத்தில் அடுத்த படத்துக்கான பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் குடும்பத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். இந்நிலையில் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு புது ஹீரோயின் ஒருவரைத் தேடி வருவதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறின.

இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகளைக் கேட்டார்களாம். படத்தின் கதையை ஸ்ரீதேவி கேட்டுவிட்டு அவரது மூத்த மகள் ஜானவி நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நிலையில் மூத்த மகள் சினிமாவின் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜானவிக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இருப்பதாக முன்பே கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பல இயக்குநர்கள், ஹீரோக்கள் படங்களில் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கில் அறிமுகமாவார் என்றே தோன்றுகிறது. கொரட்டலா சிவா ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி படத்தை இன்னும் மாஸ் , கிளாசாக உருவாக்க இருக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்