வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (29/10/2015)

கடைசி தொடர்பு:19:31 (29/10/2015)

மலையாளத்தில் நடிகராகிறார் கெளதம் மேனன்!

தெலுங்கில் வளர்ந்துவரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் வினித் சீனிவாசன். இவரின் அடுத்தப் படத்தில் நவின்பாலியுடன் கொளதம் மேனனும் நடிக்கவிருக்கிறார்.

வினித் சீனிவாசனுக்கும் நிவின் பாலிக்கும் முதல் படம் “மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்”. இப்படத்தின் மூலம் உச்ச நடிகராக மாறினார் நிவின்பாலி. வினித் அடுத்தடுத்து தட்டத்தின் மறயத்து, தீரா உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதுமட்டுமில்லாமல் நிவின் பாலி நடிப்பில் வெளியான வடக்கன் செல்ஃபி படத்தின் கதையும் இவரே.

வினித் அடுத்ததாக எடுக்கவிருக்கும் படத்தின் பெயர் “ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்”. இப்படத்தில் இவரின் நண்பர் நிவின் பாலியே ஹீரோ, மற்றும் கெளதம் மேனன், சாய்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படம் 2016 கோடை விடுமுறைக்கு வெளியாகிறது.

மலையாளத்தில் கெளதம் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்திற்கான அறிவிப்பை வினித் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெள்ளைத் தாளில் எழுதி புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். படத்திற்கான போஸ்டரோ, எந்த வித ஆடம்பரமோ இல்லாமல் சாதாரனமாக வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்