விஜய் பாணியில் களம் இறங்கும் மகேஷ் பாபு! | Mahesh Babu Daughter to act in Brahmotsavam

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (02/11/2015)

கடைசி தொடர்பு:18:37 (02/11/2015)

விஜய் பாணியில் களம் இறங்கும் மகேஷ் பாபு!

 வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் விஜய்க்கு நிகராக நடனம் ஆடியிருப்பார் அவரது மகன் சஞ்சய். மேலும் அந்தப் பாடலில் சஞ்சய்யின் நடனம் பலராலும் பாராட்டப்பட்டது . தற்போது அதே பாணியில் தெலுங்கின் பிரின்ஸ் எனச் செல்லமாக அழைக்கப்படும் மகேஷ் பாபு தன் செல்ல மகளை அடுத்த படமான பிரம்மோத்சவம் படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார். 

இதே போல் சென்ற வருடம் வெளியான மகேஷ் பாபுவின் 1:நினொக்கடினே படத்தில் அவரது மகன் கௌதம் ஒரு காட்சியில் இடம்பிடிக்க, அந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. தற்போது அவரின் மகள், சித்தாரா பிரம்மோஹ்சவம் படத்தில் ஒரு முக்கிய ரோலிலேயே நடிக்க இருக்கிறாராம். 

அவரது பாத்திரம் கடைசி நேரத்தில் தான் முடிவானது என்றும் மேலும் இதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தோம் ஆனால் கசிந்துவிட்டது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மகேஷ் பாபுவின் குட்டி மகள் சித்தாரா நம்மூரின் அஜித்தின் மகள் அனௌஷ்கா போல் பல நிகழ்ச்சிகளில் மிகவும் எனர்ஜியாக, நடனம் ஆடிக்கொண்டும், கொஞ்சிப் பேசிக்கொண்டும்  பலரது கவனத்தை ஈர்த்து வந்தவர் என்பதால் பிரம்மோத்சவம் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close