மைக்கை தள்ளிவிட்டு கோபமாக வெளியேறிய நாகார்ஜுனாவால் பரபரப்பு!

 முன்னணி தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, வேகமாக மைக்கை தள்ளிவிட்டு, பத்திரிகையாளர் கேள்விக்குப்  பதில் கூறாமல் சென்றிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
செவ்வாய் அன்று ஹைதராபாதில் நடைபெற்ற  IIFA உத்சவம் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகர்ஜுனா ,கமல் ஹாசன்,வெங்கடேஷ் , தமன்னா, நம்ரதா ஷிரோத்கர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மீடியவுடனான கலந்துரையாடலில் நாகர்ஜுனா தான் நடிக்கப் போகும் படங்கள் பற்றியும், தனது மகன் அகிலின் முதல் படம் பற்றியும் கூறிகொண்டிருக்கும் போது, திடீரென ஒரு பத்திரிகையாளர் தற்போது நிலவி வரும் ஷாருக்கானின் சகிப்புத் தன்மை பிரச்சனை பற்றி அவரது கருத்தினை கூறுமாறு நாகார்ஜுனாவிடம் கேட்டிருக்கிறார்.  பத்திரிகையாளர் கேள்வியை முழுவதுமாக முடிக்கும் முன்பே, ஆவேசமாக மைக்கைத் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார் நாகார்ஜுனா.
 
 
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக் கான், கமல் ஹாசன் போன்றோர் இதைப் பற்றி தமது கருத்தினை தெரிவித்துள்ள நிலையில், நாகார்ஜுனாவின் கருத்தையும் தெரிந்து கொள்ள பத்திரிகையாளர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி கருத்துத்  தெரிவித்து, பிரச்சனையில் மாட்டிக்கொள்ள விருப்பம் இல்லாததலாயே நாகார்ஜுனா அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிகிறது.   
 
-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!