பிரபாஸுக்கு டும் டும் டும்

டோலிவுட்டில் அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நானி என அனைத்து இளம் ஹீரோக்களுக்கும் திருமணமாகிவிட்டது. இன்னும் பிரபாஸ் மட்டும் பேச்சுலர். பாகுபலி படத்திற்காக தான் தன் திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறார் என வதந்திகள் இருந்த நேரத்திலேயே பிரபாஸ் தன் திருமணம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது பிரபாஸ் திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் சுற்றி வருகிறது. அந்தப் பெண் பீமாவரைத்தை சேர்ந்த சேர்ந்தவர் என்றும் தற்போது பிடெக் படித்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அவரின் படிப்பு முடிந்ததும் பிரபாஸுக்கும் இவருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அதற்குள் பாகுபலியின் இரண்டாம் பாகமும் முடிந்துவிடும் என்று காத்திருக்கிறாராம் பிரபாஸ். அந்தப் பெண் பற்றி கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப் படாத நிலையில் இவர்களது திருமணம் அடுத்த வருட இறுதியில் நடைபெறும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!