நாகார்ஜுனா மகனுக்குத் திருமணம்

தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா திருமணத்துக்குத் தயார் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 23 அன்று தனது 29 வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் சைதன்யா, அன்று இதைப்பற்றித் தெரிவிக்க இருப்பதாகத் தெரிகிறது.

அவர் மணந்து கொள்ளப் போகும் அந்த பெண் ஒரு பிரபலம் என்றும், இது காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஸ்ருதி ஹாசனுடன் கிசுகிசுவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இவரது சமகாலத்து திரை நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன் , ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்றோருக்கு திருமணமாகிவிட்டது. மேலும் பிரபாஸின் கல்யாணம் குறித்த தகவல்களும் வெளியாகத் துவங்கிவிட்டன. இந்நிலையில் நாகசைதன்யாவின் திருமணச் செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!