வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (19/11/2015)

கடைசி தொடர்பு:16:26 (19/11/2015)

பிரபாஸ் இல்லாத பாகுபலியா?...அதிர்ச்சிக் கொடுத்த படக்குழு!

பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகமும் உள்ளது என ராஜமௌலி சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத் கூறுகையில் பாகுபலி இரண்டு பாகங்களோடு முடியப்போவதில்லை. மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.அதற்கான கதை எழுதும் பணீயில் தான் நான் பிசியாக இருக்கிறேன். ஆனால் அந்த பாகம் முதல் இரண்டு பாகங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட படம் எனக் கூறியுள்ளார்.

அதே சமயம் படத்தில் முந்தைய பாகங்களில் இருந்த பிரபாஸ், கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், ராணா உள்ளிட்டோர் யாருமின்றி முற்றிலுமாக வேறு நடிகர்கர்கள் நடிக்கும் படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பாகுபலி பாகம் 3ல் பிரபாஸ் இல்லை எனச் செய்தி வெளியானதும் அவருடைய ரசிகர்களுக்கும், பாகுபலியின் ரசிகர்களுக்கும் சற்றெ அதிர்ச்சியாக மாறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க