நயன்தாரா தெலுங்கிலும் ஹாட்ரிக் அடிப்பாரா? | venkatesh nayanthara fair joinhands once again

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (20/11/2015)

கடைசி தொடர்பு:13:08 (20/11/2015)

நயன்தாரா தெலுங்கிலும் ஹாட்ரிக் அடிப்பாரா?

தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் உடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. முன்னதாக இவர்கள் நடிப்பில் வெளிவந்த லக்ஷ்மி மற்றும் துளசி படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்த ஜோடி  தற்போது மாருதி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு இசை  ஜிப்ரான் என்றும், படத்தின் பெயர் ராதாகிருஷ்ணா என்றும் கூறப்படுகிறது. எனினும் படத்தின் மற்ற அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வெங்கடேஷ், ஜனவரியில்  வெளிவந்த கோபாலா கோபாலா படத்தில் நடித்திருந்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். தமிழில் வரிசையாக ஹிட் படங்கள் மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் நயன் மீண்டும் தெலுங்கில் வெங்கடேஷ் உடன் நடிக்கும் இப்படம் வெற்றியடைந்து, இவர்கள் கூட்டணியில் ஹாட்ரிக் அடிக்குமா என  ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close