பிரேமம் சாய்பல்லவியின் அடுத்த பிளான்?

மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் மேக்கப் இன்றி, தனது இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி, ஒரே படத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தற்போது அஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து சமீர் தாகிர் படத்தில் நடிக்கவுள்ளார். துல்கர் சித்தார்த்தாகவும், பல்லவி அஞ்சலியாகவும் நடிக்கவுள்ள இப்படம், இளம் தம்பதியர்களின் காதல் கதையை மையமாக கொண்டதாம்.

முதல் படத்தில் சாதுவான குடும்பப்பெண்ணாக வலம் வந்த சாய் பல்லவி இப்படத்தில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக நடிக்க உள்ளாராம், இந்தப் படத்திலும் இவருக்கு மேக்கப் ஏதும் இல்லையாம். சாய் பல்லவியின் இரண்டாவது படம் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இச்செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். 

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!