ஆபாசப் படங்கள் பார்க்க வழி இல்லையா?...ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சை!

சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் 007 படம் ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் பல இளைஞர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.காரணம் 007 படங்கள் என்றாலே ஆக்‌ஷன், தொழில்நுட்பங்கள், எல்லாவற்றிற்கும் மேல் பாண்டின் ரொமான்ஸ் தருணங்கள். இதில் இந்தியாவில் வெளியான ‘ஸ்பெக்டர்’ படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் நீக்கப்பட்டன.

இதனையடுத்து முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சென்சார் தரப்பையும், மேலும் சென்சாரின் உறுப்பினர் பாஹ்லஜ் நிஹலானியை கருத்துகளால் வறுத்தெடுத்துவிட்டனர் இளசுகள்.

இதற்கு சமீபத்தில் ராம் கோபால் வர்மா வருத்தம் தெரிவித்துள்ளார், சென்சார் தரப்பில் அவர்கள் வேண்டுமென்றே இதையெல்லாம் செய்வதில்லை. அவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் அரசு கொடுத்துள்ளது. அதன்படியே அவர்கள் வேலையைச் செய்கிறார்கள்.

ஏன் சில காட்சிகளை சென்சார் தரப்பு படத்தின் இயல்பு பாதிக்கக் கூடாது என விரும்பி கட் செய்யாமல் விட்டுள்ள சம்பவங்களும் உள்ளன. 1998ம் ஆண்டு வெளியான சத்யா  இந்திப் படத்தில் இருந்த ஒரு கெட்ட வார்த்தையை படத்தில் அந்த வார்த்தை தேவை என்பதை உணர்ந்து நீக்காமல் வைத்தனர். அதிலும் சில உறுப்பினர்கள் வேண்டாம் என்றது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலத்தில் ஒரு படத்தில் முத்தக்காட்சிகள் நீக்கப்பட்டால் அது அவ்வளவு பெரிய இழப்பு இல்லையே. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களில் கையில் மொபைல்களை வைத்துக் கொண்டு இளைஞர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். ஆபாசப் படங்கள், காட்சிகள் பார்க்கவா வழி இல்லை? என சென்சாருக்கு ஆதரவாக பேசியுள்ளது இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!