Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலர் டீச்சரிடம் இருந்தது.. ஸ்ருதியிடம் இல்லாதது..!

ஸ்ருதிஹாசன் பிரேமம் தெலுங்கு ரீமேக்கான 'மஜ்னு'வில் 'மலர் டீச்சராக' நடிக்கிறார் என்கிற செய்தி வெளியான நாளில் இருந்து தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் புலம்பி வருகிறார்கள்.  ஏன் "மலர் டீச்சர்" மீது ஜோர்ஜை (நிவின்பாலி) விட அதிக ஆர்வம் நம்ம ஆட்களுக்கு. ஸ்ருதி அந்த சக்ஸஸ்புல்லான கேரக்டரை செய்துவிடுவாரா? என பல கேள்விகள். முதலில் மலர் டீச்சர் மீது ஏன் இவ்வளவு க்ரேஸ் என பார்ப்போம்.

மலர் டீச்சர் என்கிற கேரக்டரில் நடித்த சாய் பல்லவி அதற்கு முன் சிறு வேடங்களில் நடித்தாலும் அதிகம் அறியப்படவில்லை. அவரை முதன் முதலில் பார்க்கும் போதே சேலையில் குடும்பப் பாங்காக பார்த்ததால் ஏற்பட்ட ஈர்ப்பு.

பொதுவாக 'ப்ரேமம்' படத்தை வெற்றிப்படமாக்கியது அது கிளப்பும் நாஸ்டாலஜியா மனநிலைதான் (நாஸ்டாலிஜியா என்பது கடந்த காலத்தின் இனிய சம்பவங்களை நினைத்துப்பார்ப்பது) காலேஜ் நாட்களும், ஸ்கூல் நாட்களும் நம் இளைஞர்களுக்கு எப்போதுமே இனிய நினைவுகளை கொடுப்பது ஒரு காரணம். இதே போன்ற கதையம்சம் உடைய ஆட்டோகிராஃப் தமிழில் சக்கை போடு போட்டது.


சின்ன சின்ன பாவனைகள்  - படம் தொடங்கியதிலிருந்து சாய் பல்லவியின் சிரிப்பும், அவர் காட்சிக்கும் வசனத்துக்கும் ஏற்றாப்போல மாற்றும் க்யூட்டான முகபாவனைகள் மூலம் அப்படியே நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.

முதல் காட்சியிலே ஜோர்ஜ் (நிவின் பாலி)  மலர் டீச்சரை இம்ப்ரஸ் செய்துவிடுகிறார் என்பது நமக்கு தெரிந்து விட்டாலும், இருவருக்குமான ரொமான்ஸும், நிவின் சாய் பல்லவியிடம் ப்ளிர்ட்டாகும் ஒவ்வொரு இடமும் அத்தனை இயல்பாய் நமக்கு நடந்த, அல்லது நாம் பார்த்த ரொமான்ஸ் சீன்களை கொசுவர்த்தி சுத்திவிடுகிறது.

 சாய் பல்லவியின் தோற்றம் மிக முக்கிய காரணம், முகப்பருக்களுடன் எதார்த்தமான தோற்றத்துடன் உண்மையாகவே மாஸ்டர்ஸ் முடித்தவுடன் பணியில் சேர்ந்திருக்கும் லெக்சரரைப்போலவே இருந்தார். அதுவும் தமிழ் கலாச்சாரத்துடன் ஜார்ஜிடம் மல்லிகைப்பூ வாங்கி வரச்சொல்லும் போது தமிழ் நெட்டிவிட்டி லவ்வை ஃபீல் பண்ணவைத்திருப்பார் .

சரி... ஸ்ருதிஹாசன் சாய் பல்லவி அளவுக்கு லைக்ஸ் குவிப்பாரா?

* ஸ்ருதி ஹாசன் 9 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். தெலுங்கு ஆடியன்ஸ் கொஞ்சம் க்ளாமராக இருந்தால்தான் கதாநாயகியை ஏற்றுக்கொள்வார்கள் அதன்படி படத்திற்கு ஏற்றவாறு கிளமராகவும் நடிக்கிறார் 'ரேஸ் குர்ரம்' எல்லாம் 'க்ளாமர் கோங்க்ரா'.

* கடைசியாக அவரின் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த 'ஶ்ரீமந்துடு' படத்திலும் ஹோம்லியான ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்த படமான ப்ரேமம் ரீமேக்கில் மலர் டீச்சரின் கேரக்டரில் ஹோம்லியாக நடித்து அதே ஃபீவரை தக்க வைப்பார் என தெரிகிறது.

* சாய் பல்லவியை அப்போதுதான் ஃப்ரேமில் ஃப்ரெஷ்ஷாக ரசிகர்கள் பார்த்தார்கள். பார்த்த நொடியிலேயே மனதைப் பறிகொடுத்துவிட்டார்கள். சாய் பல்லவியிடம் இருந்த அந்த மேஜிக் மெஸ்மரிசம் ஸ்ருதியிடம் இருக்கவே இருக்காது. ஆனால், ஒரு ‘டாப் ஸ்டார்’ லவ்லியான ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்தால், அது டபுள் ஜாக்பாட்டாக இருக்கும். 

* அவ்வளவு ஹோம்லியான சாய் பல்லவி ‘பிரேமம்’ படத்தில் தடாலென குத்து டான்ஸ் டீச்சராகி பாடம் எடுப்பார். அவ்வளவு நேரம் ‘பூ...புஷ்பம்’ என உருகியவர்களை, அந்த திடுக் துடுக்குத்தனம் ஆச்சரியப்பட வைத்தது. அப்படியொரு ஆச்சரியத்தை ஸ்ருதி கொடுப்பாரா என்பதும் இப்போதைக்கு சந்தேகமே. ஆனால், ஸ்ருதி ஒரு ‘க்விக் லேர்னர்’. ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப தன்னை அப்டேட் பண்ணிக் கொள்வார். ‘மலர் டீச்சராகவும்’ ஸ்கோர் அடிப்பார் என்று நம்புவோமாக.

ஏனென்றால், 'த்ரிஷ்யம்' தமிழில் ரீமேக் ஆகியபோது மோகன்லால் போல் கமலால் நடிக்க முடியாது என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் அசத்திவிட்டார் கமல். அப்பா வழியில் மகளும் அசத்துவாரா என்பதை... பார்க்கத்தானே போகிறோம்!

- நா.செந்தில்குமார் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement