Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிங்கத்தையே சாய்க்கும்டா இந்த பெங்கால் புலி... ஆனா, கூடவே இருக்கணும் தமன்னா கிளி!’

சென்னை தியேட்டர்களில் அல்லு கிளப்பிக் கொண்டிருக்கிறது  தெலுங்கு படம்  பற்றி சின்ன இன்ட்ரோ.

தமிழில் வெளிவந்த 'இஷ்டம்' படம் நினைவிருக்கிறதா? அதன் ஒரிஜினல் 'ஏமாய்ந்தி ஈ வேளா' படத்தை இயக்கிவர்தான் சம்பத் நந்தி. அதன் பிறகு ராம் சரண் நடித்த 'ரச்சா' படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல கலெக்‌ஷன். இப்போது 'பெங்கால் டைகர்' படத்துக்கு வருவோம்.

ஆகாஷுக்கு (ரவிதேஜா) எப்படியாவது ஃபேமஸ் ஆக வேண்டும் என்பது விருப்பம். மினிஸ்டர் ஷியாஜி ஷின்டே பங்கேற்கும் மாநாட்டில் அவர் மீது கல்லை விட்டு எறிகிறார். 'பேமஸ் ஆவதற்காக மினிஸ்டரை கல்லால் அடித்தவர் என பப்ளிசிட்டி கிடைக்கிறது ரவிதேஜாவுக்கு. ரவிதேஜா தன்னுடன் இருந்தால் பாதுகாப்பு என நினைக்கும் ஷியாஜி ஷின்டே வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.

சந்தர்பத்தால் ஹோம்மினிஸ்டர் மகள் ராசி கண்ணாவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் ரவி. அதனால் ரவி தேஜாவை ஹோம் மினிஸ்டர் தன்னிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். ஒருகட்டத்தில் ரவி தேஜாவை ராசி கண்ணா காதலிக்கிறார்.

தந்தையும் அதற்கு சம்மதித்து ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, ரவி தேஜாவை மாப்பிள்ளையாக அறிவிக்கிறார். ரவி தேஜா 'நான் முதலமைச்சரின் (போமன் இரானி) மகள் மீராவைக் (தமன்னா) காதலிக்கிறேன்' எனக் கூறுகிறார். உண்மையில் ரவி தேஜா யார்? எதற்காக இப்படி செய்கிறார்? என்பது காரசார அன்லிமிட்டட் ஆந்திரா மீல்ஸ்.

"உனக்கு பயமே இல்லையா?"

"அதோட எனக்கு அறிமுகமே இல்ல"

"என்னைக் கொல்லுற கத்தியோ, துப்பாக்கியோ இன்னும் தயாராகலடா"

"நான் சப்போர்ட்டோட மேல வந்தவன் இல்ல, தானா வந்தவன்டா" என படம் முழுக்க மாஸ் பன்ச்கள் ஏராளம்.

47 வயது ரவிதேஜாவின் எனர்ஜி ஆஸம்..! டான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் என இந்த வயதிலும் அதே துள்ளலுடன் நடித்து பக்கா எண்டர்டெயின் செய்கிறார். க்ளோஸப்பில் காட்டும் போது மட்டும் சுருக்கங்களை மறைக்கும் டி.ஐயும், மென்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும் பளிச்சிடுகிறது (கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே பாஸ்).

தமன்னா, ராசி கண்ணா இருவரும் சம்பிரதாயமான ஹீரோயின்கள். ஹீரோவுடன் டூயட் பாடுகிறார்கள், ரசிகர்களுக்கு கிளாமர், க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ சொல்லும் ஃப்ளாஷ் பேக் கேட்டு அழுவது என தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சிகளிலும், ஒரு குளியல் முடிந்த காட்சியிலும் தமன்னாவின் கிளாமர்... அம்மாவின் ஆணைக்கிணங்க நிவாரணப் பணிகள் நடக்கும் சமயம் அதைப் பற்றிப் பேசப்பிடாது!

தெலுங்கில் கேமரா இல்லாமல் கூட படம் எடுத்துவிடுவார்கள். ஆனால், பிரம்மானந்தம் இல்லாமல் வாய்ப்பே இல்லை போல. சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார் அமலா பால் (படத்தில் பிரம்மானந்தத்தின் பெயர்).

எல்லாம் ஓ.கே... ஆனால் ஸ்க்ரிப்டு பேப்பரே சலித்துக் கொள்ளும் அளவுக்கு அரதப் பழைய கதை மட்டும் ரொம்பவே உருத்துகிறது. ஆனால் கண்டிப்பாக மாஸ் பட ரசிகர்களுக்கு, மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் விருந்து இந்த 'பெங்கால் டைகர்'

பெங்கால் டைகர் - பெயர் காரணம்:

சிங்கம் தான் காட்டுக்கு ராஜா. ஆனால், அந்த சிங்கத்தையும் ஜெயிக்கக் கூடியது தான் வங்காளப் புலி. அதே போல போமன் இரானி முதலமைச்சர் பதவியில் இருப்பவர். அவரையே தண்டிக்கும் வங்காளப் புலி தான் ரவி தேஜா. எனவே, இந்தப் படம் பெங்கால் டைகர் என அன்போடு அழைக்கப்படுகிறதாம். போட்டுத் தாக்கு!

- பா.ஜான்சன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement