ராஜமௌலியின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட , அதிகம் வசூலித்த படம் என்றால் அது பாகுபலியாகத்தான் இருக்கும். பிரம்மாண்ட படமாக வெளியாகி இந்தியா முழுக்க 500 கோடிகளை அசால்ட்டாக வசூலித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தற்போது மொத்த இந்தியாவும் காத்திருக்கிறதெனலாம்.

பாகுபலி ஏன் கொல்லப்பட்டார்?, ரம்யா கிருஷ்ணன் செய்த பாவம் என்ன?, அனுஷ்காவுக்கு பிற்பாதியில் என்ன நேர்ந்தது? என பல கேள்விகளுக்கு பாகுபலி இரண்டில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ஸ்ரேயா சரண் பாகுபலியில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என புது தகவல் கிடைத்துள்ளது.

மொத்தம் 9 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ள இப்படம் தற்போது ப்ரீபுரடக்‌ஷன் வேலைகளில் உள்ளன, மேலும் இரண்டு புது நடிகர்கள் இந்த பாகம் இரண்டில் இணையலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் ராஜமௌலி பாகுபலி 2ம் பாகத்தை 1000 கோடி வசூலிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

அதற்குக் காரணமாக சொல்லப்படுவது, படம் வெளியாகி சினிமாவுக்கே வாராத பல மக்களையும் திரைக்கு இழுத்துள்ளது.  இந்தியாவின் அனைத்து டிவி சேனல்களிலும் படம் ஒளிபரப்பும் ஆகிவிட்டது.

கண்டிப்பாக பாகுபலி முதல் பாகத்தை திரையரங்கில் பார்க்காதவர்கள், இரண்டாம் பாகத்தை ஆர்வமாகப் பார்ப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில்  ராஜமௌலி இருப்பதாக  படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.  பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!