ராம் சரணின் கனவு...ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்?

சிரஞ்சீவியின் மகனும் மெகா பவர் ஸ்டாருமான  ராம் சரணின், மாவீரன் படம் மூலம் தமிழிலும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்புகள் உள்ளன.மாவீரனைத் தொடர்ந்து ‘புரூஸ் லீ : தி ஃபைட்டர், மற்றும் மகதீரா உள்ளிட்ட படங்கள் என மகேஷ் பாபு படங்களையடுத்து ராம் சரண் படங்களும் தமிழில் டப்பாகி வெளியாகத் துவங்கிவிட்டன.

இந்நிலையில் சமீபத்திய ரிட்ஸ் விருது விழாவில் பேசிய ராம் சரண் தன்னுடைய மிகப்பெரிய ஆசை சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதே. மேலும் சல்மான்கான் எனது நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். சல்மான்கானின் சம்பளம் மட்டும் ஒரு படத்துக்கு 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பட்ஜெட் மற்றும் மற்றவர்கள் சம்பளம் என கணக்கிட்டால் கண்டிப்பாக 200 முதல் 250 கோடிகளை சாதாரணமாகத் தொடும் எனலாம். சல்மான்கான் ராம் சரணின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.

மேலும் பேசிய ராம் சரண், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் , அகில் படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.  அவருக்கும் தனது வாழ்த்துகளைச்  சொன்ன ராம் சரண், அகில் நல்ல நடனக் கலைஞர், கண்டிப்பாக அவர் எதிர்காலத்தில் நல்ல நடிகராக வருவார் எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!