கிசுகிசுக்களை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்...ரெஜினா அதிரடி பதில்!

கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா, தொடர்ச்சியாக சில தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ச்சியாக ராஜதந்திரம் படத்தில் நடித்தவர் இப்போது விஷாலின் ‘கதகளி’ படத்தில் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகருடன் கிசுகிசுவில் சிக்கினார்  ரெஜினா. இப்போது, அதற்கு பதிலளித்துள்ளார். ”எனது நண்பர்கள் என்னைக் கிண்டலடிப்பார்கள். எப்படி ஒரு நடிகருடன் கிசுகிசுவில் சிக்காமல் ஆறு வருடமாக நடித்துவருகிறாய் என.  எனவே இந்த கிசுகிசுவையடுத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது தான் நான் ஒரு பிரபலமாகக் கருதுகிறேன். அதே சமயம் நீங்கள் கிசுகிசுக்கும் நடிகரான சாய் தரம் தேஜ் எனக்கு நல்ல நண்பர்.

இரண்டு படங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம் கிசுகிசுக்கள் வருவது சாதாரணம் தான். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தபோதும் இது வெறும் வதந்தியே. எனக்கு எப்படி சந்தீப், ரகுல் ப்ரீத் சிங், நண்பர்களோ அதே பாணியில் தான் சாய் தரம் தேஜும். நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களை நண்பர்களாக பேசிக்கொள்வோம். எங்களுக்குள் நட்பைத் தாண்டி எதுவும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!