தயாரிப்பாளராக அறிமுகமாகும் நிவின்பாலி | Nivin pauly Making production debut with the movie!

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (21/12/2015)

கடைசி தொடர்பு:13:06 (21/12/2015)

தயாரிப்பாளராக அறிமுகமாகும் நிவின்பாலி

பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நிவின்பாலியின் அடுத்தப் படம் பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. நிவின் பாலியின் அடுத்தப் படத்தின் பெயர் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு.

நிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட்டான “ 1983”  படத்தை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். கோபிசுந்தர் படத்திற்கு இசையமைக்கிறார்.

நிவின்பாலி புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாலி ஜூனியர் பிச்சர்ஸ். இந்த நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. 

இப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் ஜனவரியில் படம் வெளியாகவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close