வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (21/12/2015)

கடைசி தொடர்பு:15:38 (21/12/2015)

2016 இல், எமி செம பிஸி!

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என மூன்று திரையுலகிலும் படு பிஸியாக இருக்கிறார் எமி ஜாக்சன். பிரபு தேவா இயக்கத்தில், அக்‌ஷய் குமாருடன் இவர் இணைந்து நடித்த சிங் இஸ் ப்லிங் வெற்றி பெற தற்போது தமிழில் வெளியாகி உள்ள தங்கமகன் என எமி காட்டில் மழை. அடுத்ததாக தெலுங்கில் அறிமுக இயக்குனர் சக்ரி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்க உள்ள படத்திற்காக ஏமியிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது, முன்னதாக 2014 இல் ராம் சரணுடன் எவ்வடு படத்தில் நடித்திருந்தார் எமி, இடையில் மற்றும் தங்கமகன் போன்ற படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் எமி ஜாக்சன் அடுத்த கட்டத்தை நெருங்குகிறார் என்றே கூற வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேல் எமி ஜாக்சன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எந்திரன்2 படத்தில் நடிக்க இருப்பது நாமறிந்ததே. இது தவிர்த்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘கெத்து’. விஜய்யுடன் ‘தெறி’ என 2016 எமி ஜாக்சனுக்கு அதிர்ஷடமான வருடம் என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஒரே நேரத்தில் தெலுங்கு டாப் ஸ்டார், தமிழில் ரஜினி, விஜய் என இரு பெரும் நடிகர்களுடன் படங்கள்.

இப்படி அடுத்தவருடம் எமி செம பிசி. 

- பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்