ட்விட்டரில் நடிகர் ஏற்படுத்திய குழப்பம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் நேற்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு செய்தியை போட்டு, ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளார். தற்போது என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நனக்கு பிரேமதோ, இப்படத்தின் ரிலீஸ் பற்றி முன்னதாகவே நிறைய குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஜனவரி 13 அன்று படம் வெளிவரலாம் என்ற தகவல்களும் சுற்றிவருகின்றது.

இந்நிலையில் நேற்று திடீரென ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ரசிகர்கள் நனக்கு பிரேமதோ பாடல் மற்றும் படம் ரிலீஸ் தேதியை அறிய விரும்புகின்றனர், எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆசை தான், ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை தான் கூற முடியவில்லை என்று ட்வீட் செய்து அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

 

பின் சிறிது நேரத்திலையே அந்த பதிவு அழிக்கப்பட்டு மீண்டும் போடப்பட்டு, மீண்டும் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் பட விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிகழ, சிறிது நேரத்தில் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இதை தவறாக ட்வீட் செய்து விட்டு சமாளிப்பதாகவும், சிலர் உண்மையில் அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யபட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அண்மை காலமாக நடிகர்களின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பதால் இதில் உண்மையும் கூட இருக்கலாம் என்கின்றனர் சிலர். எனினும் ஹேக் செய்தவன் இதையெல்லாமா பதிவிடுவான் என சந்தேகமும் எழுந்துள்ளது. எது உண்மைனு தெரியலையே நியாயமாரே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!