வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (22/12/2015)

கடைசி தொடர்பு:17:39 (22/12/2015)

நயன்தாரா கேரக்டரில் ஸ்ருதி ஹாசன்?

 மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, நடிப்பில் வெளியான படம் ‘தனிஒருவன் படத்திற்கு இசை ஆதி. இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் ஆகவிருக்கிறது. 

படத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் என்றால் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, மற்றும் நயன்தாரா பாத்திரங்களே. இந்நிலையில் ஏற்கனவே தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது.

தற்சமயம் சிரஞ்சீவியின் 150வது படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் ராம்சரண் இப்படத்தின் வேலைகளை முடித்தபின் தனி ஒருவன் ரீமேக்கில் இணைய உள்ளார்.

இதனையடுத்து படத்தின் முக்கிய பாத்திரங்களான வில்லன் பாத்திரத்திற்கு அரவிந்த் சாமியே நடிக்க இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன், நயன்தாரா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தற்போது ராம் சரணின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் பிரேமம் தெலுங்கு ரீமேக் படத்தில் மலர் பாத்திரத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க