முதல்முறையாக கெட்டப்பை மாற்றிய கௌதம் மேனன்

தற்போது ஜகோபிண்டே ஸ்வர்கராஜியம் எனும் மலையாளத் திரைப்படத்தில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன், அக்கதாபாத்திரத்திற்க்காக, இது வரை பள பள என வைத்திருந்த தனது முகத்தில் தாடி வைத்துள்ளார்.

2001 இல் மின்னலே படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகமான இவரை இந்த 14 வருடங்களில் ஒரு முறை கூட தனது முகத்தோற்றத்தை மாற்றிடாத கெளதம், முதன் முறையாக இப்படத்திற்காக மாற்றியுள்ளார். முன்னதாக தான் இயக்கிய திரைப்படங்களிலேயே ஒரு சில காட்சிகளில் இவர் நடித்திருந்தாலும், தனது தோற்றத்தை ஒருபோதும் மாற்றியது இல்லை.

 

இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமாக உள்ளார் கெளதம். இதில் கெளதம் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது தாடி பற்றிய செய்தி வேகமாக பரவிவருகிறது.

நவீன கால இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் உள்ள உறவை விளக்குகிறது இப்படம். வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கும் இப்படத்தில், நிவின் பாலி, ரெஞ்சி பணிக்கர், T.G ரவி போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கெளதம் தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிவருகிறார்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!