கன்னட சினிமாவில் கால்பதிக்கும் கத்ரினா கைஃப்

இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப் முதல் முறையாக தென்னிந்தியப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அரசியல்வாதி HD குமாரசுவாமியின் மகன் நிக்கில் குமார் நடிக்கும் "ஜாகுவார்" எனும் கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் மூலம் கத்ரினா கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குநர் ராஜமௌலியிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த s . மஹாதேவ் என்பவர் இயக்குகிறார். டிசம்பர் 16 இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை அடுத்து, கத்ரினா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்ற செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு பாடலுக்கு நடனம் என்றாலும், கத்ரினாவின் வரவு கன்னடத் திரையுலகில் பெரிதாகப் பேசப்பட்டு வருவதோடு, சமூகவலைதளங்களிலும் வைரலாகி உள்ளது.கத்ரினாவின் வருகை கன்னட ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஜனவரி 6 முதல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள படக்குழுவினர் படத்தின் கதாநாயகியைத் தேடும் வேட்டையில் உள்ளனர்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!