பாகுபலி மொழியில் வைரலாகும் ஸ்மிதாவின் பாடல் (வீடியோ)

இசைத்துறையில் புதுமைகளைச் செய்துவரும் ஸ்மிதாவின் அடுத்த பாடல் “பாஹா கிளிக்கி”. பாகுபலி படத்திற்காக இந்தப் பாடலைச் சமர்ப்பித்திருக்கிறார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் கிளிக்கி என்ற மொழி  மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’.

இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா.

இப்பாடலின் சிலவரிகள் இதோ,

“பாஹா கிளிக்கி
 ராஹா கிளிக்கி
 பிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி
 ஊனோ தூவோ மூவோ ச்சாவோ
 டம்பாடம்பா பூகோ கிளிக்கி”

என்ற வரிகளுடன் கூடிய ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளசுகளின் மத்தியில் வைரல் ஹிட்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்து, 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் ஸ்மிதா. தெலுங்கு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை ரசிகர்களை மெய்மறக்கச்செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!