ஆண்களைத் திட்டிய பிரபல ஹீரோவின் மனைவிக்குச் சிக்கல்!

தெலுங்கு பவர் ஸ்டார் பவன்கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் சமூகவலைதளங்களில் பிசியாக இருப்பவர். அவ்வப்போது ஏதேனும் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையாக்குவது வழக்கம். இம்முறை ஆண்களை கொஞ்சம் சீண்டி விட்டுள்ளார்.

என்னதான் பெண்கள் தங்களை மறைத்துக்கொண்டு உடைகள் உடுத்தினாலும் ஆண்களின் பார்வைகள் மாறப்போவதில்லை. பெண்களின் உடைகளில் குறைகள் இல்லை. எல்லாம் ஆண்களின் கண்களில் தான் உள்ளது. எப்போதும் பெண்களை ஒரு காமப் பொருளாகவே அவர்கள் காண்கிறார்கள் எனக் கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.இதனால் பலரும் ரேணுவை சமூகவலைகளில் திட்டி வருகிறார்கள். சிலர் ஆதரவும் கொடுத்துள்ளனர்.

இவர் தமிழில் பிரபுதேவா, பார்த்திபன் நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் ஆடை வடிவமைப்பாளரான ரேணு தெலுங்கு பத்ரி படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2013ம் ஆண்டு இருவரும் விவாகாரத்து பெற்று பிரிந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!