பிரேமம் நடிகர்களுடன் மீண்டும் இணையும் நிவின் பாலி | Nivin Pauly’s next film be by debutant Althaf

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (09/01/2016)

கடைசி தொடர்பு:13:21 (09/01/2016)

பிரேமம் நடிகர்களுடன் மீண்டும் இணையும் நிவின் பாலி

2015ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் "ப்ரேமம்". நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இப்படத்தை 'நேரம்' பட இயக்குநர் 'அல்போன்ஸ் புத்திரன்' இயக்கினார். சென்னை திரையரங்குகளில்  மட்டும்  200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியது.

அடுத்ததாக "ஆக்‌ஷன் பிஜு" என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் நிவின் பாலி, அதற்கடுத்து வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் “ஜாக்கப்பினேட் ஸ்வர்கராஜ்யம்” என்ற படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து  ப்ரேமம் படத்தில் நடித்த "அல்தாப்" இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் மேரியின் காவலாளி போல் கூடவே வருவானே ஒரு ஒல்லிப் பையன். அது தான் அல்தாப்.

அல்தாப் இயக்கவிருக்கும் படத்தில் நிவின் பாலி கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார். அதுவும் ப்ரேமம் பட "ஜார்ஜ்" போல சேட்டைகள் செய்யும் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளாராம். மேலும் ப்ரேமம் படத்தில் நண்பர்களாக நடித்த ஷரபுதீன், கிருஷ்ணா ஷங்கர், சிஜு வில்சன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் கூட்டணியின் ப்ரேமம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

வேட்டி கட்டினால் ப்ரேமம், தாடி வளர்த்தால் ப்ரேமம் என ப்ரேமம் மீது தீராக்காதல் கொண்ட நம்மாட்களுக்கு அல்தாப்பின் இப்படம் அடுத்த விருந்தினை படைக்குமா?   
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்