கன்னடத்துக்குப் போகும் வேதாளம்....அஜித்தை ஈடுகட்டுவாரா இவர்? | Ajith's Vedhalam goes to Kannada, Punith Rajkumar is a hero

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (09/01/2016)

கடைசி தொடர்பு:14:51 (09/01/2016)

கன்னடத்துக்குப் போகும் வேதாளம்....அஜித்தை ஈடுகட்டுவாரா இவர்?

அஜித் நடிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் தீபாவளி ரிலீஸாக வெளியான படம் வேதாளம். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா நடித்த இப்படத்துக்கு இசை அனிருத். கமர்ஷியல் அளவில் மெகா ஹிட்டடித்த இப்படம் தற்போது கன்னட சினிமாவையும் அலங்கரிக்க இருக்கிறது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஹீரோயினாக நடிக்க முன்னணி நாயகி ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும் தமிழில் வேதாளம் படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் கன்னடத்திலும் தயாரிக்க இருக்கிறார்.

நந்தா கிஷோர் படத்தை இயக்க இருக்கிறார். படத்துக்கு இசை, மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாலி , வரலாறு படங்களுக்குப் பிறகு அஜித் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்த படம் வேதாளம் என்பது குறிப்பிடத்தக்கது. புனித் ராஜ்குமார் அஜித் கொடுத்த நடிப்பை கொடுப்பாரா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close