பெங்களூர் நாட்களைத் தொடர்ந்து அடுத்த மலையாள ரீமேக்? | Another Mollywood movie Happy Birthday to remake in Tamil

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (09/01/2016)

கடைசி தொடர்பு:18:11 (09/01/2016)

பெங்களூர் நாட்களைத் தொடர்ந்து அடுத்த மலையாள ரீமேக்?

சமீபகாலமாக மலையாளப் படங்கள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளன. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் ரீமேக் லிஸ்டில் உள்ளன.

தற்சமயம் பெங்களூர் நாட்கள் படம் முழுமையாக முடிந்து அடுத்து பிரேமம் தமிழ் ரீமேக் துவங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அங்கு படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்பு ரீமேக் செய்வதைத் தொடர்ந்து, படம் உருவாகி வரும் தருவாயிலேயே ஒரு படத்தை தமிழில் உருவாக்க இருக்கிறார்கள்.

கௌதம் மோகன் இயக்கத்தில் ஆசிஃப் அலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை கௌதம்மோகனே தமிழில் இயக்க இருக்கிறார். தமிழிலும் ஜனனி ஐயர் நடிப்பார் எனத் தெரிகிறது.

ஒருகட்டத்தில் தெலுங்குப் படங்கள் அதிக அளவில் தமிழில் ரீமேக் ஆகின. இப்போது மலையாளப் படங்களின் காலம் என்று சொல்லலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close