நஸ்ரியாவின் கணவருக்கு மாஸ் ஹிட் கிடைக்குமா?

நஸ்ரியாவின் கணவரும், மலையாள முன்னணி நடிகருமான ஃபகத் ஃபாசிலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள்,. ஃபகத்தின், நார்த் 24 காதம், மணி-ரத்னம், பெங்களூர் டேய்ஸ், என பல படங்கள் நம்மூரு சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம்.

இந்நிலையில் சென்ற வருடம் ஃபகத்துக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கும்  படங்கள் அமையவில்லை. வெளியான மூன்று படங்களான மரியம் முக்கு, ஹரம், ஆயால் ஞானல்லா போன்ற படங்கள் ஃபகத்தின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டன என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் சற்று சொதப்பல் தான்.

விமர்சனங்களும் சரியான அளவில் கிடைக்காத பட்சத்தில் ஜனவரி 15ம் தேதி வெளியாகவிருக்கும் மன்சூன் மேங்கோஸ் படத்தை அதிகமாக எதிர்பார்த்து வருகிறார். இது மட்டுமின்றி இந்த வருடம் மகேஷிண்டே பிரதிகாரம், நாலே ஆகிய படங்களில் நடித்து வரும் ஃபகத்துக்கு 2016ம் ஆண்டு கைகொடுக்குமா பார்க்கலாம்!!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!