சிம்பு, அனிருத் கூட்டணியில் மீண்டும் ஒரு பாடல்?

பீப் பாடல் சர்ச்சை இன்னும் ஓயவில்லை.சிம்பு மீது வழக்குகள் நடந்துவரும் நிலையில் அனிருத் தனக்கும் பீப் பாடலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.  சிம்புவுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் சிம்பு , அனிருத் கூட்டணி தெலுங்கு படமொன்றில் பாடவிருக்கிறார்கள். மங்காத்தா நடிகர் மகத் ராகவேந்திரா , மற்றும் செட்னா நடிப்பில் உருவாகி வரும்  ’ஷி’ படத்தில் தான் இவர்கள் இருவர் குரலிலும் இரு பாடல்கள் உருவாக உள்ளன.

 

பாம்பே போல் இசையமைக்கும் இப்படத்தை இயக்குகிறார் பர்சா மகேந்தர். மகத் செட்னா தவிர்த்து ஸ்வேதா மேனன், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து மகத் கூறுகையில், இது ஒரு கமர்ஷியல் ஹாரர் படம். நான் ஒரு பப்பில் வேலை செய்கிறேன். எனக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் காதல் உருவாகிறது. இடையில் சில ஹாரர் சம்பவங்கள் நடக்கின்றன. இதுதான் ஷி படத்தின் கதை எனக் கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய படங்களில் இவர்கள், பாடி, இசையமைத்தது சாதாரண விஷயம் என்றாலும் பீப் சர்ச்சைக்குப் பிறகு ஒரே படத்தில் மீண்டும் இவர்கள் இணையவுள்ளனர் என்பது சினிமா உலகை பரபரப்பாக்கியிருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!