வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (19/01/2016)

கடைசி தொடர்பு:16:43 (19/01/2016)

பாலாகிருஷ்ணாவின் 100வது படம்...கலக்கல் புரமோஷன்களுடன் ரசிகர்கள் தயார்!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகரான நந்தமுறி பாலகிருஷ்ணாவின் 100வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 99 படங்களில் நடித்துள்ள இவற்றின் சமீப வெளியிடு டிக்டேட்டர், ஜனவரி 14 இப்படம் வெளியாகிறது. தற்போது இவரது 100வது படம் பற்றிய செய்தி அவரது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

1991ல் இவரது நடிப்பில் வெளியான அறிவியல் புனைக்கதை "ஆதித்யா 369" மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் பின்னர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டும் வெளியாகியது. தற்போது மீண்டும் அப்படத்தை இயக்கிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுடன் இணைந்து அதன் அடுத்த பாகத்தை பாலகிருஷ்ணாவின் 100வது படமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

"ஆதித்யா 999" என்றே பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இப்படத்தின் முதல் பாகம் டைம் டிராவல் பற்றிய படம், மேலும் இது வரை தெலுங்கில் வெளிவந்த ஒரே அறிவியல் புனைக்கதை பற்றிய படமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. மீண்டும் அட்ராட்சி சரவெடி டயலாக்குகளுடன் பாலைய்யா களத்தில் இறங்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி என்றே கூறலாம் 

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்