வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (03/02/2016)

கடைசி தொடர்பு:18:53 (03/02/2016)

மலர் டீச்சரின் அடுத்த அவதாரம்!

பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலக ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் மலர் டீச்சராக நமக்கு தெரிந்த சாய் பல்லவி. இவரின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மானுடன் சாய்பல்லவி நடித்துக்கொண்டிருக்கும் படம் “கலி”. இப்படத்தை சமீர் தாகிர் இயக்கிவருகிறார். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இயக்குநர் சமீருடன் என்னுடைய இரண்டாவது படமே கலி. இன்றுடன் நான் திரையுலகிற்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது” என்கிறார் துல்கர். 

பிரேமம் மலையாளமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சாய்பல்லவியும், இரண்டு நேரடித் தமிழ் படங்களில் நடித்த துல்கரும் இணையும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகுமா என்பதே ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்