ஸ்ருதி ஹாசனை ஓரம்கட்டிய நடிகை!

சென்ற வருடம் தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம், தனி ஒருவன். தமிழ்த் திரையுலம் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து திரையுலகமும் இதன் ரீமேக் உரிமத்தைப் பெற போட்டியிட்டனர். தமிழில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா என அவரவர் பங்கிற்கு நடிப்பில் சீறி இருந்தனர்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், மெகா ஸ்டார் ராம் சரண் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகிய நிலையில், கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என கூறப்பட்டது. கிட்டதட்ட அவர் தான் என செய்திகள் பரவி வந்த நிலையில் ,அந்த வாய்ப்பு ரகுல் பரீத் சிங்கிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக ராம் சரணுடன் புரூஸ் லீ படத்தில் இணைந்து நடித்திருந்த ரகுல் பரீத் சிங்கிற்கு, இது அவருடனான இரண்டாவது படம். இந்த வருடத்தில் முதலில் வெளியான நன்னகு பிரேமத்தோ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாகவும் ரகுல் பரீத் சிங் நடித்திருந்தார்.

இப்படம் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தனி ஒருவன் ரீமேக்கிலும் ரகுல் நடிக்க இருப்பது பலரது கவனத்தையும் ரகுல் மீது திருப்பியுள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளார். 1995க்கு பிறகு அரவிந்த் சாமி, மீண்டும் தெலுங்கில் நடிக்கவுள்ளார். மேலும் தெலுங்கில் அரவிந்த் சாமி நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இப்படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழாவே, தெலுங்கிலும் இசையமைக்க இருக்கிறார்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!