தாரைதப்பட்டை வரலட்சுமிக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு | Varalaxmi Sarathkumar makes Mollywood debut

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (13/02/2016)

கடைசி தொடர்பு:13:01 (13/02/2016)

தாரைதப்பட்டை வரலட்சுமிக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு

பாலா இயக்கத்தில் உருவான “தாரைதப்பட்டை"யில்  நடிப்பால் ரசிகர்களின் மனதில் சிறந்த ஃபர்பாமராக நின்றவர் வரலட்சுமி. அடுத்ததாக மலையாளத் திரையுலகிலும் வரலட்சுமி அறிமுகமாகவிருக்கிறார்.

பிரேமம் படத்தில் நிவின்பாலிக்கு தந்தையாக ஒரு காட்சியில் வந்தாலும் கெத்துகாட்டும் ரெஞ்சி பனிக்கரின் மகனான நிதின் பனிக்கர் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் மம்முட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சம்பத் முக்கிய ரோலில் நடிக்கவிருக்கிறாராம். இன்னும் டைட்டில் முடிவுசெய்யப்படாத நிலையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

இதுபற்றி வரலட்சுமி ட்விட்டரில், “ மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கவிருக்கிறேன். அவருடன் வேலைசெய்யவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”, மேலும் என் இயக்குநர் நிதின் பனிக்கருக்கும் நன்றி என்று  ட்விட் செய்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close