1000 திரையரங்குகளில் டீஸர்...மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனோடு படத்தின் முதல் டீஸர், 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தினை போயபட்டி ஸ்ரீனு இயக்க, ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரசா, ஸ்ரீகாந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசை தமன். படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வரும் வியாழன் அன்று வெளியாகிறது, இருப்பினும் வெள்ளியன்று, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 1000 திரையரங்குகளில் படத்தின் டீஸரை திரையிட முடிவுசெய்துள்ளனர் படக்குழுவினர்.

சாதரணமாக ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாக அப்படத்தின் டிரெய்லரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும், ஆனால் முதல் முறையாக சரைனோடு படத்தின் டீஸர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ள இப்படம், அல்லு அர்ஜுனின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!