ரஜினியே சொன்ன அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் | Pawan Kalyan should be next Super Star , RajiniKanth

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (23/02/2016)

கடைசி தொடர்பு:15:20 (23/02/2016)

ரஜினியே சொன்ன அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் பவன் கல்யாண். வெறித்தனமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் அவரை  தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என ரசிகர்கள் அழைப்பது நாமறிந்ததே. சமீபத்தில் அவரைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் சுனில்.

அவர் பேசுகையில், பிப்ரவரி 19 வெளியாகிய கிருஷ்ணாஷ்டமி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்படத்தின் நாயகன் சுனில், ஒரு முறை ரஜினி பவன் கல்யாணின் ஜல்சா படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு, அதில் பவன் கல்யாணின் தனித்துவமான ஸ்டைலினை கண்டு ஆச்சரியப்பட்டதோடு, டோலிவூட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவராகத் தான் இருப்பார் என ரஜினி கூறிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என இங்கு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தான், தெலுங்கில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரஜினி கூறியதாக வெளிவந்துள்ள இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழோ, தெலுங்கோ சூப்பர் ஸ்டாரிடமிருந்தே, சூப்பர் ஸ்டார் என பாராட்டு பெற்ற பவன் கல்யாண்க்கு நிச்சயம் இது கூடுதல் மாஸ் தான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close